2027 உலக கிண்ணம்; இந்தியா - பாகிஸ்தான் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்பு
india, pakistan can face 3 times in 2027 icc odi worldcup: ஐசிசி 2027 உலக கிண்ணத்தில், இந்தியாமற்றும் பாகிஸ்தான் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.
2027 உலக கிண்ணம்
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கிண்ணம், 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 21 வரை நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்த உள்ளன.
12 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடர், A மற்றும் B என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
குரூப் A பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. தகுதிச் சுற்று மூலம் மேலும் ஒரு அணி இந்தப் பிரிவில் இணையும்.
𝙈𝘼𝙍𝙆 𝙔𝙊𝙐𝙍 𝘾𝘼𝙇𝙀𝙉𝘿𝘼𝙍𝙎 🗓️
— ICC (@ICC) October 1, 2026
The ICC Men’s #CWC27 fixtures have been unveiled 🏆
Access the ticket ballot 🎫 https://t.co/MSLEQzcObb pic.twitter.com/dpTE4TEjO7
குரூப் B பிரிவில்,இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்று மூலம் தேர்வாகும் மற்றொரு அணியும் இந்தப் பிரிவில் இணையும்.
இதில், 12 அணிகள் மொத்தமாக 30 போட்டிகளில் விளையாடும். இரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் 2 பிரிவுகளிலும் சேர்த்து அடுத்த சிறந்த இடத்தைப் பிடிக்கும் ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 7 சுற்றில் நடைபெறும் 21 போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்
அக்டோபர் 7 ஆம் திகதி இந்தியா தனது முதல் போட்டியில், அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
அக்டோபர் 10 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோத உள்ளது.

தொடரின் புதிய வடிவத்தின்படி, இரு அணிகளும் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறினால் சூப்பர் 7 சுற்றில் 2வது முறையாக நேருக்கு நேர் மோதலாம்.
இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், இறுதி போட்டியில் 3வது முறையாக நேருக்கு நேர் மோதலாம்.
இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளதால், 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்பு அமைந்துள்ளது.