இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்... ஐக்கிய அமீரகத்திற்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் சில இந்திய நகரங்களிலிருந்து விமானக் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
கட்டண உயர்வால் அதிர்ச்சி
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் திரும்ப மக்கள் முந்துவதை அடுத்தே கட்டணங்கள் அதிகரித்துள்ளது.
இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட பலரும் இந்தக் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர். போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தானில் இருந்து எந்த விமான சேவையும் முன்னெடுக்கப்படாத நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே 18 ஆம் திகதி வரையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் அதன் பின்னர் விலை குறையலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திங்களன்று டெல்லியில் இருந்து துபாய் வரையில் பயணிக்க ரூ 44,670 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரக மதிப்பில் Dh1,920. இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுப்பதால் பஞ்சாபில் விமான நிலையங்கள் மூடப்படும் சூழலில் டெல்லியில் இருந்து பயணிக்க இந்தக் கட்டணம் வசூலித்துள்ளனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை டெல்லி - துபாய் கட்டணம் Dh910 என சரிவடைந்துள்ளது. இதனிடையே, டெல்லியில் இருந்து ஷார்ஜா வரையான கட்டணம் அடுத்த சில நாட்களுக்கு Dh1,180 முதல் Dh1,360 வரையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
நிலைமை சீரடையும்
ஆனால் டெல்லி - அபுதாபி இடையே திங்களன்று Dh2,230 என இருந்த கட்டணம் செவ்வாய்க்கிழமை Dh3,900 என விற்பனையானது. இதேப்போன்று கடந்த திங்களன்று ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனங்களில் லாகூரில் இருந்து துபாய்க்கு விமானக் கட்டணம் Dh9,100 என இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை Dh5,100 என சரிவடைந்தது.
உள்ளூர் விமான சேவைகளில் லாகூரில் இருந்து அபுதாபிக்கு புதன்கிழமை வரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டணம் Dh7,050 என அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு விமான சேவைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் நிலைமை சீரடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |