ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான 4 மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்ற இந்தியா திட்டம்
ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான 4 மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
மார்ச் 31 அன்று நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், மொத்தமாக ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான நான்கு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்ய உள்ளது. இ
ந்த ஒப்பந்தங்கள் போர் திறன்களை மேம்படுத்துவதற்கும், இந்திய ஆயுதங்களின் கையிருப்பை ஊக்குவிப்பதற்குமான நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியாகும்.
இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆயுதப் படைகளுக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் போர்த் திறனை அதிகரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில், முதல் ஒப்பந்தமாக பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல்-மரைன் போர் விமானங்களை நேரடியாக வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது, உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்து இயக்கப்படும்.
இதேபோல, பிரான்ஸ் நாட்டுடன் மற்றொரு பெரிய ஒப்பந்தம் ரூ.38,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, பிரான்சிடம் இருந்து AIP பொருத்தப்பட்ட மூன்று கூடுதல் ஸ்கார்பீன்-வகுப்பு டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளது.
இந்த கப்பல்கள் , மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்.) நிறுவனத்தில் கட்டப்பட்ட உள்ளன. இந்த கப்பல் 2031 ஆம் ஆண்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு இந்திய அமைச்சரவை குழு (சிசிஎஸ்) இம்மாத இறுதிக்குள் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஸ்கார்பீன் ஒப்பந்தத்துக்கும் விரைவில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. கூடுதலாக, மற்ற இரண்டு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அதாவது, சுமார் ரூ. 53,000 கோடி மதிப்பிலான 156 உள்நாட்டு பிரச்சந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் மற்றும், ரூ.8,500 கோடி மதிப்புள்ள 307 மேம்பட்ட இழுக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கி அமைப்புகள் வாங்கும் திட்டமாகும்.
இந்த இரண்டு மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களும் மார்ச் 31-ம் திகதிக்குள் கையெழுத்தாக உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |