114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம்
இந்திய பாதுகாப்பு அமைச்சகம், வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை விவாதிக்கத் தயாராகியுள்ளது.
114 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிலிருந்து வாங்கும் இத்திட்டம், சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் நடைபெறவுள்ள உயர் மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
திட்டத்தின் படி, பெரும்பாலான விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். சுமார் 30 சதவீதம் அளவுக்கு உள்ளூர் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் இணைக்கப்படும்.

ஆரம்ப கட்டத்தில், 12 முதல் 18 ரஃபேல் விமானங்கள் நேரடியாக (fly-away condition) வாங்கப்பட்டு, இந்திய விமானப்படையில் உடனடியாக சேர்க்கப்படும்.
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் ரஃபேல் படை எண்ணிக்கை 176-ஆக உயரும்.
ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளன. மேலும், கடந்த ஆண்டு கடற்படைக்கு 26 ரஃபேல்-M விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் F-35 மற்றும் ரஷ்யாவின் Su-57 போன்ற 5வது தலைமுறை போர் விமானங்கள் இந்தியாவுக்கு முன்மொழியப்பட்டிருந்தாலும், இந்தியா ரஃபேல் திட்டத்தையே முன்னெடுக்கிறது.
காரணம், Operation Sindoor-ல் ரஃபேல் Spectra electronic warfare suite மூலம் சீனாவின் PL-15 ஏவுகணைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டது.
மேலும், பிரான்ஸ், ரஃபேல் விமானங்களில் பயன்படுத்தப்படும் M-88 என்ஜின்களுக்கு ஹைதராபாத்தில் Maintenance, Repair & Overhaul (MRO) மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. Tata உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் பங்கு பெறவுள்ளன.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை பல மடங்கு உயர்த்தும் வரலாற்றுச் சாதனையாக அமையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Rafale jet deal 2026, Rs 3.25 lakh crore defence deal, 114 Rafale jets India acquisition, Indian Air Force Rafale expansion, Defence Ministry Rafale purchase, Reliance Tata Rafale production India, Biggest fighter jet deal India France, Rafale fighter jets India order news, India defence procurement Rafale jets, Indian military aviation Rafale update