போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இந்திய பிரதமர் மோடி அளித்த பரிசு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகளை விரைவாக ஏற்படுத்துவதற்காக நான்கு மொபைல் மருத்துவமனை யூனிட்களை (Mobile Hospital Units) பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த யூனிட்கள், "BHISHM" எனப்படும் (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri) கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மொபைல் மருத்துவமனைகள், எந்த இடத்திலும் 10 நிமிடங்களில் செயல்படக்கூடிய மருத்துவ அமைப்புகளை உருவாக்க உதவுகின்றன.
இவை காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சையை வழங்குவதற்காக, 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த யூனிட்கள், முக்கிய மருத்துவ உதவிகளை வழங்குவதில் உக்ரைனுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.
இந்த யூனிட்களை வழங்குவதன் மூலம் இந்தியா, உலகளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் உறுதியாக உள்ளது என்பதை பிரதமர் மோடி இந்த நடவடிக்கையால் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Ukraine, India PM Modi Gifts Ukraine mobile hospital unit, Ukraine