16 வயதில் ரூ.100 கோடி நிறுவனம் - சாதித்த இந்தியாவின் பிராஞ்சலி அவஸ்தி
ஒரு நிறுவனத்தை தொடங்கி சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை 19 வயதான பிராஞ்சலி அவஸ்தி நிரூபித்துள்ளார்.
பிராஞ்சலி அவஸ்தி
இந்தியாவில் பிறந்த பிராஞ்சலி அவஸ்தி(pranjali awasthi), தனது 7 வயதிலே கோடிங் மீதான ஆர்வத்தால் அதனை கற்க தொடங்கியுள்ளார்.

கணினிப் பொறியாளரான அவரது தந்தை, பிராஞ்சலி அவஸ்தியின் 11வது வயதிலே குடும்பத்துடன் அமெரிக்காவின் புளோரிடாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
பள்ளியில் பயிலும் போதே தனது 13 வயதில் இயந்திரக் கற்றல் திட்டங்களில் பணிபுரியும் ஒரு ஆராய்ச்சிப் பயிற்சியில் பங்கேற்கத் தொடங்கினார்.
அங்கு பெரியளவிலான விலான இணையத் தரவுகளை வகைப்படுத்தும்போது ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கண்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து அவரது 15வது வயதில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், மியாமியை தளமாக கொண்டு டெல்வ்.ஏஐ (Delv.AI) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
Delv.AI என்பது, ஆராய்ச்சியாளர்கள் கல்விசார் உள்ளடக்கங்கள், PDFகள் மற்றும் பலவற்றிலிருந்து தகவல்களைப் பிரித்தெடுத்துச் சுருக்கிக் கூற உதவும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தளமாகும்.

தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலே ஆன் டெக் மற்றும் வில்லேஜ் குளோபல் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 4,50,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 3.7 கோடி) நிதி திரட்டினார்.
அதைத்தொடர்ந்து, தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிலே நிறுவனத்தின் மதிப்பு ரூ.100 கோடியை எட்டியது.
அதைத்தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் சல்ஷி (Salshy) நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் ஆனார்.
சல்ஷி என்பது டிஜிட்டல் நிர்வாக உதவியாளராகச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட AI மூலம் இயங்கும் மின்னஞ்சல் உதவியாளர் மற்றும் ஆட்டோமேஷன் தளமாகும்.
பிராஞ்சலி அவஸ்தி, ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணினி அறிவியல் பயின்று வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |