இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தொடர்பில் WHO முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான Covovax-க்கு அவசரகால அனுமதி வழங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
WHO வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நோவாவாக்ஸின் உரிமத்தின் கீழ் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த Covovax தடுப்பூசி, இப்போது உலகளாவிய தடுப்பூசி-பகிர்வு அமைப்பான கோவாக்ஸின் ஒரு பகுதியாக விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது என WHO அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய மாறுபாடுகள் தோன்றினாலும், கொரோனாவிலிருந்து கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக மக்களைப் பாதுகாக்க தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும் என்று WHO-வின் தடுப்பூசிகளுக்கான அணுகல் தலைவரான Mariangela Simao கூறினார்.
இந்த பட்டியில் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தடுப்பூசி அணுகலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 41 நாடுகள் இன்னும் தங்கள் மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கு கூட தடுப்பூசி போட முடியவில்லை, அதே நேரத்தில் 98 நாடுகள் 40 சதவீதத்தை எட்டவில்லை என்று Mariangela Simao கூறினார்.