டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ஜடேஜா விலகல்: சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!
டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகல்.
முழங்கால் அறுவைச் சிகிச்சை குணமடைய போதிய நேரம் வேண்டும் என்பதால் விலகுவதாக தகவல்.
இந்திய அணியின் ஆல்-டவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
சமீபத்தில் துபாயில் வைத்து நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆல்-டவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முழங்கால் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவிற்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அறுவை சிகிச்சை முடிவடைந்தாலும், அவர் காயத்தில் இருந்து முழுமையாக பூரணம் பெற மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும் என தெரியவந்துள்ளது.
பொதுவாகவே சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு போதிய பயிற்சிகாலம் தேவைப்படும் என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் காரணமாக அவுஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு செல்லும் சீன உயர்மட்ட சட்டமன்ற அதிகாரி: குவியும் உலக தலைவர்களின் கவனம்!
டி20 உலக கோப்பையில் ஜடேஜா விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதுடன், ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.