ரஷ்யாவிற்கு செல்லும் சீன உயர்மட்ட சட்டமன்ற அதிகாரி: குவியும் உலக தலைவர்களின் கவனம்!
ரஷ்யாவிற்கு சீனாவின் உயர்மட்ட அதிகாரி லி ஜான்ஷு சுற்றுப்பயணம்.
கிழக்கு பொருளாதார மாநாட்டிற்காக சீன அதிகாரி லி ஜான்ஷு ரஷ்யாவிற்கு செல்வதாக தகவல்.
சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற உறுப்பினர் லி ஜான்ஷு(Li Zhanshu) அரசுமுறை சுற்றுப் பயணமாக இந்த வாரம் ரஷ்யாவிற்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வ சின்ஹூவா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே, ரஷ்யாவின் அத்துமீறலை கண்டிக்காத சீனா, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று மறைமுகமாக அங்கிகரித்து வருகிறது.
அதுமட்டுமின்றி பிப்ரவரியில் சந்தித்து கொண்ட சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இருவரும் வரம்புகள் அற்ற மூலோபாய கூட்டாண்மையை அறிவித்தனர்.
இந்தநிலையில் இந்தவாரம் விளாடிவோஸ்டோக்கில்(Vladivostok) நடைபெறும் ஏழாவது கிழக்கு பொருளாதார மாநாட்டிற்காக சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற உறுப்பினர் லி ஜான்ஷு ரஷ்யாவிற்கு செல்ல உள்ளார்.
இதுத் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை சின்ஹுவா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவரான லி ஜான்ஷு புதன்கிழமை முதல் செப்டம்பர் 17 வரை ரஷ்யா, மங்கோலியா, நேபாளம் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என சின்ஹுவா தெரிவித்துள்ளது.
REUTERS/Carlos Garcia Rawlins
கூடுதல் செய்திகளுக்கு: ஹோட்டலின் ஆறாவது மாடியில் இருந்து குதித்த பிரித்தானிய பெண்: விடுமுறைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது இடத்தில் உள்ள லி ஜான்ஷு அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் தனது கட்சி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.