ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வலியுறுத்திய வங்கதேசம் - இந்தியா அளித்துள்ள பதில்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க கோரிக்கை வைத்த வங்கதேசத்திற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதால் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தோடு, 20,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பல்வேறு கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டன.
போராட்டக்காரர்கள் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அதிகார பூர்வ இல்லத்தை கைப்பற்றியதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் தப்பி, இந்தியா வந்து தஞ்சமடைந்துள்ளார்.
வன்முறை தொடர்பாக ஷேக் ஹசீனா மீது குற்றஞ்சாட்டப்பட்டு, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT) நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டை உறுதி செய்து அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, “எனக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமானவை" என தெரிவித்துள்ளார்.
இந்தியா அளித்துள்ள பதில்
இதனையடுத்து, "இந்திய அரசு தாமதமின்றி ஷேக் ஹசீனாவை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவது நீதிக்கு இழைக்கப்படும் அவமதிப்புக்கு சமம்" என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக 'வங்காளதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்' அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
Our statement regarding the recent verdict in Bangladesh⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) November 17, 2025
🔗 https://t.co/jAgre4dNMn pic.twitter.com/xSnshW6AzZ
நெருங்கிய அண்டை நாடாக, வங்காளதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது, அதில் அமைதி, ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும்.
அதற்காக நாங்கள் எப்போதும் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம்" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |