சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில், சீனாவைப் புறக்கணிக்கும் ஒரு முக்கிய மாற்றம் உருவாகி வருகிறது.
Dixon Technologies, Amber Enterprises, Bhagwati Products, Optiemus, PG Electroplast மற்றும் Epack Durable போன்ற முன்னணி இந்திய ஒப்பந்த உற்பத்தியாளர்கள், தாய்வான், தென்கொரியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை நோக்கி நகர்கின்றனர்.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், 2020-ம் ஆண்டில் இந்தியா-சீனா எல்லை மோதலுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட Press Note 3 என்ற அரசு விதிமுறை ஆகும்.
இதன் படி, சீன முதலீடுகள் அனைத்தும் பல்வேறு அமைச்சகங்களின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும், சீனாவின் rare earth magnets ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், இந்திய உற்பத்தியாளர்களை சீனாவைத் தவிர்க்கத் தூண்டியுள்ளன.
ரூ.22,919 கோடி மதிப்பில் செயல்படும் மின்னணு கூறு உற்பத்தித் திட்டத்தின் கீழ், ரூ.59,350 கோடி முதலீடுகளை ஈர்ப்பது, ரூ.4,56,500 கோடி மதிப்பில் உற்பத்தி செய்வது, மற்றும் 91,600 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இலக்காக உள்ளது.
Amber Enterprises நிறுவனத்தின் CEO ஜஸ்பிர் சிங், Korea Circuit உடன் ரூ.3,000 கோடி மதிப்பில் கூட்டுத் திட்டம் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
Micromax நிறுவனத்தின் Bhagwati Products, PG Electroplast, Optiemus, மற்றும் Epack Durable நிறுவனங்களும் சீனாவை தவிர்த்து, தாய்வான் மற்றும் தென்கொரியா நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளன.
இந்த மாற்றம், இந்திய உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களின் வெற்றிக்கு முக்கிய அடிப்படையாய் அமைக்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India electronics manufacturing news, India China electronics trade 2025, Dixon Technologies Taiwan partnership, Amber Enterprises Korea joint venture, Press Note 3 China investment India, India electronics self-reliance policy, India Taiwan Korea Japan tech partnership