ஆப்பிளின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி சபிஹ் கான் நியமனம்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (Chief Operating Officer) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1995-ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் தற்போதைய COO ஜெஃப் வில்லியம்ஸின் பதவியை ஏற்க உள்ளார். வில்லியம்ஸ் ஆண்டுகள் நீண்ட சேவைக்குப் பிறகு இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளார்.
ஆப்பிள் CEO டிம் குக், “சபிஹ் கான் புத்திசாலி மற்றும் தீவிரத் திறமை கொண்ட ஒருவர். உலகம் மாற்றமடையும் வேகத்தில் ஆப்பிள் பொருட்கள் சீராக தயாராகும் விதத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்,” எனப் பாராட்டியுள்ளார்.
சபிஹ் கான் தற்போது ஆப்பிளின் Senior Vice President of Operations-ஆக பணியாற்றி வருகிறார். ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தி மற்றும் சப்ளை செயின் நடவடிக்கைகளுக்கு இவர் வழிகாட்டியாக உள்ளார்.
கோவிட பாண்டமிக் போன்ற சவால்களை ஆப்பிள் வென்றடைய அவரின் திட்டமிடல் முக்கிய பங்காற்றியது.

சீனாவிற்கு செல்லவிருந்த கப்பலை இந்தியாவிற்கு வரவைத்த அம்பானி - அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி
யார் இந்த சபிஹ் கான்?
சபிஹ் கான் 1966-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத்தில் பிறந்தவர். பள்ளிக் கல்விக்காக சிங்கப்பூருக்கு குடிபோன இவர் பின்னர் அமெரிக்கா சென்றார்.
Tufts University-யில் பொருளியல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்ததுடன், Rensselaer Polytechnic Institute (RPI)-யில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதுகலை படித்துள்ளார்.
அரம்பத்தில் GE Plastics நிறுவனத்தில் பணியாற்றிய சபிஹ், பின்னர் ஆப்பிளில் Procurement Team-ல் இணைந்தார். பாகங்கள் வாங்குதல் முதல் தயாரிப்புத் திறனை மேம்படுத்துதல் வரை அவர் பங்கு வகித்தார்.
இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்தியை விரிவாக்கும் பணியிலும் சபிஹ் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஆஜ்தக் வெளியிட்ட ஒரு செய்தியில், சபிஹ் கான் ஹிந்தி பாடல்களை ரசிப்பவர் என்றும், பார்லே-ஜி (Parle-G) பிஸ்கட் பிடித்தமான உணவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sabih Khan Apple COO, Apple leadership change 2025, Indian origin Apple executive, Tim Cook on Sabih Khan, Apple operations head 2025, Apple supply chain India, Apple COO Jeff Williams retirement, Sabih Khan Apple