உலகின் டாப்-10 பணக்காரர்கள் பட்டியல்: இரண்டாம் இடத்தைப்பிடித்த Oracle லாரி எலிசன்
உலகின் தற்போதைய டாப்-10 பணக்காரர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Forbes-ன் ஜூலை 2025 உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தைக் காக்கிறார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 393.1 பில்லியன் டொலர் ஆகும், இங்கு SpaceX நிறுவத்தின் மதிப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது.

சீனாவிற்கு செல்லவிருந்த கப்பலை இந்தியாவிற்கு வரவைத்த அம்பானி - அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி
இந்நிலையில், Oracle நிறுவனத்தின் தலைவர் லாரி எலிசன், Mark Zuckerberg மற்றும் Jeff Bezos ஆகியோரை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Oracle பங்குகளின் 32% உயர்வு காரணமாக, அவருடைய சொத்து மதிப்பு $275.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.
மூன்றாம் இடத்தில் Zuckerberg ($247.9B), நான்காம் இடத்தில் Bezos ($236.8B), மற்றும் ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Bernard Arnault ($147.7B) உள்ளனர்.
NVIDIA நிறுவனத்தை நிறுவிய Jensen Huang, தற்போதைய உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனத்திற்கு தலைமை வகிக்கிறார். அவரது சொத்து மதிப்பு $137.9 பில்லியனாக உயர்ந்துள்ளதால், 10-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஜூலை 2025 – உலகின் Top 10 பணக்காரர்கள்:
இடம் | பெயர் | சொத்து மதிப்பு | நிறுவனம் | நாடு |
1 | Elon Musk | $393.1B | Tesla, SpaceX | USA |
2 | Larry Ellison | $275.9B | Oracle | USA |
3 | Mark Zuckerberg | $247.9B | USA | |
4 | Jeff Bezos | $236.8B | Amazon | USA |
5 | Bernard Arnault | $147.7B | LVMH | France |
6 | Larry Page | $146.2B | USA | |
7 | Warren Buffett | $143.1B | Berkshire Hathaway | USA |
8 | Steve Ballmer | $141.3B | Microsoft | USA |
9 | Sergey Brin | $139.7B | USA | |
10 | Jensen Huang | $137.9B | NVIDIA | USA |
இந்தியாவின் பணக்காரர் யார்?
இந்தியாவில் முகேஷ் அம்பானி ($116B) தன் முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார். உலகளவில் 15வது இடத்தில் உள்ள இவர், $100 பில்லியன் சொத்து மதிப்பைக் கொண்ட ஒரே ஆசியராக இருக்கிறார்.
சாவித்ரி ஜிந்தால் மற்றும் குடும்பம் ($37.3B) நான்காவது இடத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |