ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல்; 3வது இடத்தில் இந்தியா
india retains 3rd spot at 2026 asia power index: 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீடு பட்டியலில், இந்தியா 3வது இடத்தை தக்க வைத்துள்ளது.
2026 ஆசிய சக்தி குறியீடு
2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீடு பட்டியலை Lowy Institute வெளியிட்டுள்ளது.
இந்த குறியீடானது, ஆசியாவில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தும் மற்றும் பிராந்திய சூழலை வடிவமைக்கும் நாடுகளின் திறனை மதிப்பிடும் குறியீடு ஆகும்.
இந்தக் குறியீடு பொருளாதாரத் திறன், இராணுவத் திறன், மீள்திறன், எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், இராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகிய 8 அளவுகளைப் பயன்படுத்துகிறது.

இதில், அமெரிக்கா 78.9 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சீனா 73.6 புள்ளிகளை பெற்று 2வது இடத்திலும் உள்ளது.
3வது இடத்தில் இந்தியா
இந்தியா, 40.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள இடைவெளி 2026 ஆம் ஆண்டில் 33.1 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் இந்தக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவே மிகக் குறைந்த அளவாகும்.
2024 ஆம் ஆண்டில் சீனா 72.7 புள்ளிகளையும், இந்தியா 39.1 புள்ளிகளையும் பெற்று, 33.6 புள்ளிகள் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. 2025 ஆம் ஆண்டில், சீனா 73.7 புள்ளிகளையும் இந்தியா 40.0 புள்ளிகளையும் பெற்றபோது, இந்த இடைவெளி 33.7 புள்ளிகளாகச் சற்று அதிகரித்தது.
ASIA POWER INDEX: In 2026, the top five countries for overall power in Asia are the United States, China, India, Japan and Russia. Australia remains sixth in this year’s ranking. https://t.co/qrk0mc8Z8y https://t.co/VVdHc9oo5H
— The Lowy Institute (@LowyInstitute) November 22, 2026
இதே போல், சீனாவின் 73.6 புள்ளிகளால் அமெரிக்கா வெறும் 5.3 புள்ளிகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டில் ஆசிய சக்தி குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவே மிகக் குறுகிய இடைவெளியாகும்.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா 81.7 புள்ளிகளையும், சீனா 72.7 புள்ளிகளையும் பெற்று, அமெரிக்கா 9 புள்ளிகள் முன்னிலை அளித்தது. 2026 ஆம் ஆண்டில் அந்த முன்னிலை 3.7 புள்ளிகள் குறைந்து 5.3 புள்ளிகளாக ஆனது.
38.6 புள்ளிகளுடன் ஜப்பான் 4வது இடத்திலும், 32.2 புள்ளிகளுடன் ரஷ்யா 5 வது இடத்திலும் உள்ளது.