இந்திய விமானப்படையிலிருந்து MIG-21 போர் விமானங்கள் ஒய்வு
ரஷ்யாவைச் சேர்ந்த MIG-21 போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகள் சேவையாற்றிய பின், இன்று (செப்டம்பர் 26) அதிகாரபூர்வமாக ஒய்வு பெறுகின்றன.
இந்த விமானங்கள் 1963-ல் சண்டிகர் விமான நிலையத்தில் முதல்முறையாக இணைக்கப்பட்டன.
அதே இடத்தில் இப்போது ஒரு சிறப்பு விழா மூலம் அவற்றுக்கு விடையளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், MIG-21 Bison விமானத்தில் இறுதியாக பறக்கவுள்ளார்.
23-வது ஸ்குவாட்ரனைச் சேர்ந்த 6 MIG-21 விமானங்கள், விழாவில் பறந்து முடித்த பின்னர், water canon மரியாதையை பெறப்படும்.
ஸ்குவாட்ரன் லீடர் பிரியா சர்மா, இந்த விமானத்தில் பறக்கும் இறுதி பெண் பைலட்டாக வரலாற்றில் இடம்பெறுகிறார்.
MIG-21 விமானங்கள், 1965 மற்றும் 1971-ல் பாகிஸ்தானுடன் நடந்த போர்களில் முக்கிய பங்கு வகித்தன. 1999-ல் நடந்த கார்கில் போரிலும், 2019-ல் பால்கோட் தாக்குதலிலும் இந்த விமானங்களின் வீரத்தை நிரூபித்தன.
இந்தியா 870-கும் மேற்பட்ட MIG-21 விமானங்களைப் பெற்றிருந்தது.
இவை Warhorse என அழைக்கப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளில் பல விபத்துகளில் ஈடுபட்டதால், பாதுகாப்பு குறைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
MiG-21 retirement, MiG-21 farewell, Indian Air Force