இந்திய விமானப்படைக்கு 97 Tejas போர் விமானங்கள்., ரூ.66,500 கோடி ஒப்பந்தம் இன்று கையெழுத்து
இந்திய விமானப்படைக்கு 97 Tejas போர் விமானங்கள் வாங்கும் ரூ.66,500 கோடி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.
இந்திய விமானப்படை தனது போர் திறனை மேம்படுத்தும் நோக்கில், ரூ.66,500 கோடி மதிப்புள்ள 97 எண்ணிக்கையிலான Tejas Mark-1A போர் விமானங்களை வாங்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடேட் (HAL) நிறுவனத்துடன் கையெழுத்திடவுள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய விமானம் வாங்கும் ஒப்பந்தமாகும்.
ஏற்கெனவே, 2021-ல் ரூ.48,898 கோடிக்கு 83 தேஜஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டது.
ஆனால், அந்த 83 விமானங்களின் முதல் தொகுப்பு இன்னும் இந்திய விமானப்படைக்கு வழங்கப்படவில்லை.
HAL நிறுவனம் அக்டோபரில் முதல் இரண்டு விமானங்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், 36 பழைய MiG-21 விமானங்கள் ஒய்வு பெறும் நேரத்தில் நடைபெறுவதால், இந்திய விமானப்படை 29 ஸ்குவாட்ரன்களாக குறையும். ஒவ்வொரு ஸ்குவாட்ரனிலும் 16-18 விமானங்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |