விண்வெளி வழிகாட்டி அமைப்பில் ரஷ்யா-இந்தியா இணைந்து நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்
ரஷ்யா மற்றும் இந்தியா, தங்களது தேசிய விண்வெளி வழிகாட்டி அமைப்புகளின் (Space navigation systems) துல்லியத்தை மேம்படுத்தும் நோக்கில் தரை நிலையங்களை அமைக்கும் திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன.
“ரஷ்யாவின் GLONASS உலகளாவிய வழிகாட்டி அமைப்பிற்கும், இந்தியாவின் NavIC பிராந்திய வழிகாட்டி அமைப்பிற்கும் தரவு சேகரிக்கும் நிலையங்களை பரஸ்பரமாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பு, Gaganyaan மனிதர் விண்வெளிப் பயணம், propulsion engineering, satellite navigation போன்ற துறைகளில் வலுவாக உள்ளது.
மேலும், பயோமெடிசின், இயற்பியல், வேதியல், சுகாதாரம், Material Science போன்ற துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அலிபோவ் மேலும் குறிப்பிட்டதாவது: “இந்திய பங்குதாரர்கள் துருவ ஆராய்ச்சி மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம், AI Algorithm மற்றும் Biometrics தொடர்பான கூட்டு ஆராய்ச்சியில் இரு நாடுகளின் ஸ்டார்ட்அப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் மாதம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு வரும்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒத்துழைப்பு, இந்தியா-ரஷ்யா உறவை விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Russia space cooperation 2025, NavIC GLONASS ground stations deal, India Russia satellite navigation pact, Vladimir Putin Narendra Modi summit, India Russia AI and quantum research, India Russia Gaganyaan collaboration, Bilateral space technology agreements, India Russia defense navigation systems, India Russia polar research partnership, India Russia strategic tech alliance