இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: அதிநவீன வசதிகள், டிக்கெட் விலை குறித்த முழு விவரம்
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது.
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
இந்திய ரயில்வே துறையின் அடுத்த மைல் கல்லாக அதிநவீன வசதிகளுடன் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் நாளை முதல் தன்னுடைய சேவையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17ம் திகதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் சேவை மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கெளஹாத்தி(காமாக்யா) இடையே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 972 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 14 மணி நேரத்தில் கடக்கிறது.
பயண விவரங்கள்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எண் 27576 (காமாக்யா - ஹவுரா): மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணியளவில் ஹவுரா சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எண் 27575 (ஹவுரா - காமாக்யா): மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணியளவில் காமாக்யா சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ரயில் வியாழக்கிழமை தவிர வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையானது விமான பயணத்திற்கு இணையான வசதிகளுடன் மூன்று வகையான AC வகுப்புகளுடன் உள்ளன.
முதல் வகுப்பு ஏசி ரூ.3,885, இரண்டாம் வகுப்பு ஏசி ரூ.3145, மூன்றாம் வகுப்பு ஏசி ரூ.2435 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிர்ணயக்கப்பட்டுள்ள கட்டணங்களுடன் ஜிஎஸ்டி மற்றும் இதர கட்டணங்கள் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தை தொடங்குவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே சார்ட் தயாரிக்கப்படுவதால், அதற்கு பிறகு பயணத்தை ரத்து செய்பவர்களுக்கு பணம் திரும்பி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல இதில் RAC மற்றும் காத்திருப்போர் பட்டியலில் கிடையாது என்றும் நேரடி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே என்று உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |