இந்தியாவில் ஒருநாளுக்கு 5.6 கோடி நன்கொடை அளிக்கும் தமிழ் தொழிலதிபர் யார்?
இந்தியாவில் அதிக நன்கொடை அளிப்பவர் தர வரிசையில் மூன்றாவது ஆண்டாக HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார்.
ஷிவ் நாடார்
இந்தியாவின் ஒரு மூலை பகுதியில் சிறிய தொழிலாக தொடங்கிய நிறுவனம் ஒன்று, இன்று உலகம் முழுவதும் ஹெச்சிஎல்(HCL) என்ற பெயரில் 60 நாடுகளில் தங்களின் கிளையை விரிவுபடுத்தியுள்ளது.
இத்தகைய பிரம்மாண்டமான ஐடி நிறுவனத்தை தொடங்கியவர் 1945ம் ஆண்டு தமிழகத்தின் தூத்துக்குடியில் பிறந்த ஷிவ் நாடார் என்ற தமிழர் ஒருவர் தான்.

2023 ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு சுமார் 2.07 லட்சம் கோடியாகும். மேலும் இவர் தலைநகர் டெல்லியின் முதல் பணக்காரராகவும், இந்தியாவின் மூன்றாவது பணக்காரராகவும் திகழ்ந்து வருகிறார்.
ஹெச்சிஎல்(HCL) நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய்) ஆகும்.
மூன்றாவது ஆண்டாக நன்கொடையில் முதலிடம்
என்ன தான் பணம் இருந்தால் கொடுப்பதற்கு மனம் வேண்டும் என்பார்கள், அந்த வகையில் ஷிவ் நாடார் பல்வேறு நல்ல காரியங்களுக்காக ஷிவ் நாடார் ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Hurun India வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில், 2022-2023 நிதியாண்டில் மட்டும் 2,042 கோடி ரூபாய் ஷிவ் நாடார் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அதாவது ஷிவ் நாடார் ஒருநாளுக்கு மட்டும் சராசரியாக ரூ.5.6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவில் அதிக நன்கொடை அளிப்பவர் என்ற (Hurun philanthropu list) தரவரிசையில் HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        