வரலாறு படைத்த சந்திரயான்-3 விண்கலம்: நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில், நிலவில் லேண்டர் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
வெற்றிகரமாக களமிறங்கிய சந்திரயான் 3
ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
ISRO
நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது, இருப்பினும் நிலவின் தென் துருவ பகுதியில் எந்தவொரு நாடும் இதுவரை தங்களது விண்கலங்களை தரையிறக்கியது இல்லை.
அப்படி இருக்கையில், நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியா தங்களது சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
நிலவில் இருந்து முதல் புகைப்படம்
இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டர், நிலவில் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
The image captured by the
Landing Imager Camera
after the landing.
It shows a portion of Chandrayaan-3's landing site. Seen also is a leg and its accompanying shadow.
Chandrayaan-3 chose a relatively flat region on the lunar surface ?… pic.twitter.com/xi7RVz5UvW
இந்த புகைப்படத்தின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவதற்கு தட்டையான பரப்பை துல்லியமாக தேர்ந்தெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் புகைப்படத்தில் லேண்டர் கால் பகுதியும், அதன் நிழலும் இருப்பதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |