1995ம் ஆண்டில்.. இந்தியாவில் ஒரு போன் அழைப்புக்கு என்ன கட்டணம் தெரியுமா?
இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன்கள் இல்லாமல் இருப்பது என்பது கற்பனை கூட செய்ய முடியாததாக உள்ளது.
அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் மொபைல் போன்களின் முதல் அடி கடந்த 3 தசாப்தங்களுக்கு முன்பு தான் மேற்கொள்ளப்பட்டது என்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.
முதல் அழைப்பு?
இந்தியாவில் மொபைல் போன்களின் அதிகாரப்பூர்வ பயணம் ஜூலை 31ம் திகதி 1995ம் ஆண்டு தொடங்கியது.

அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மறைந்த ஜோதி பாசு, இந்தியாவின் முதல் மொபைல் போன் அழைப்பை மேற்கொண்டு வரலாறு படைத்தார்.
நோக்கியா நிறுவனத்தின் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி மேற்கு வங்க முதலமைச்சர் மறைந்த ஜோதி பாசு, அப்போதைய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சுக் ராமுடன் தொலைபேசியில் பேசினார்.
இந்த அழைப்பானது மோடி டெல்ஸ்ட்ரா நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொபைல் புரட்சி

பொதுமக்கள் மத்தியில் மொபைல் போன்கள் புழக்கத்திற்கு வந்த போது, அழைப்பிற்கான கட்டணம் மிக அதிக அளவில் இருந்தது.
அந்த காலகட்டத்தில் ஒரு நிமிட அழைப்பிற்கு ரூ.8.4 செலவானது, அதிக பரபரப்பான நேரங்களில் அழைப்பிற்கான நெட்வொர்க்கை பயன்படுத்தும் செலவு இரட்டிப்பாக உயர்ந்து ரூ.16.8 ஆக உயர்ந்தது. இன்றைய தின ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.170 ஆகும்.
ஆனால் இந்தியாவில் தொலைத்தொடர்பு வணிகத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ல் நுழைந்த பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின.
ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இந்தியாவில் எந்தவொரு நெட்வொர்க்கும் மேற்கொள்ளப்படும் மொபைல் அழைப்புகள் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.
சர்வதேச அழைப்புகளுக்கு நிலையான நியாயமான கட்டணங்கள் பொருந்தும் என்றாலும், ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு, உலகின் மிகக் குறைந்த மொபைல் கட்டணத் திட்டங்கள் மற்றும் இணைய சேவை கட்டணங்கள் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |