இந்தியாவில் நடந்த பிரமாண்ட திருமணம் - ரூ.500 கோடி வரையில் செலவு...!
பொதுவாகவே அனைவரும் தங்களது திருமணத்தை பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் சிறியளவில் செய்து விடுவார்கள்.
அந்தவகையில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவிலேயே பிரமாண்டமான திருமணம் நடந்துள்ளது.
இந்தியாவில் நடந்த பிரமாண்ட திருமணம்
சுரங்கத் தொழிலதிபர் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சரான ஜி ஜனார்த்தன ரெட்டியின் மகளான பிராமணி ரெட்டிக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விக்ரமின் மகன் ராஜீவ் ரெட்டிக்குமே இவ்வாறான திருமணமானது நிகழ்ந்துள்ளது.
நவம்பர் 6, 2016 அன்று இந்த திருமணமானது நிகழந்துள்ளது. தோராயமாக ரூ. 500 கோடி செலவில் இந்தியாவின் மிக விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
திருமணத்தின்போது மணமகள் பிராமணி ரெட்டி அணிந்திருந்த உடை மட்டும் ரூ. 17 கோடி.
அந்த ஆடையானது தங்க நூல்களால் மிகவும் நுணுக்கமாக காஞ்சீபுரம் புடவையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
திருமணத்தின்போது ரூ. 25 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை மணமகள் அணிந்திருந்தார். அணிந்த ஒட்டுமொத்த நகைகளின் மதிப்பு ரூ. 90 கோடி ஆகும்.
அந்த திருமணத்திற்கு பங்கேற்கவிருந்த விருந்தினர்களை தங்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகளில் 1500 அறைகளை தயார் செய்துள்ளனர்.
2 ஆயிரம் டாக்ஸிகள், 15 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அரச குடும்பங்கள் சாப்பிடுவது போன்று வகை வகையான உயர்தர உணவுகள் பரிமாரப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதல் பற்றியும் பலரால் அதிகமாக பேசப்பட்டிருந்தது.
ஒவ்வொரு அழைப்பிதழ் உடனும் ஒரு வெள்ளி விநாயகர் சிலையும் , மொத்த அழைப்பிதழுக்கும் ரூ. 5 கோடியை செலவழித்துள்ளனர்.
அந்தவகையில் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ. 500 கோடி செலவு செய்து பிரமாண்ட திருமணத்தை செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என்றே கூறலாம்.
மேலும் இவ்வளவு பணம் இவருக்கு எங்கிருந்து வருகிறது? அனைத்திற்கும் இவர் சரியாக வரி செலுத்தி வருகிறாரா எனவும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி பரபரப்பை எற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |