இஷா அம்பானி உள்பட பல்வேறு பிரபலங்கள்.., 35 வயதுக்குட்பட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியல்
இந்தியாவில் 35 வயதுக்கு உட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் (Huron Research Institute) வெளியிட்டுள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியல்
ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் (Huron Research Institute) வெளியிட்டுள்ள 35 வயதுக்கு உட்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 150 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில், 29 இளம் கோடீஸ்வரர்களுடன் பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது. இவர்களுக்கு 100 மில்லியன் டொலர் முதல் 500 மில்லியனுக்கும் அதிகமாகச் சொத்து உள்ளது என்பதை குறிக்கிறது.
இதில், தேர்டு வேவ் காபி (Third Wave Coffee) உரிமையாளர்கள் சுஷாந்த் கோயல், ஆயுஷ் பத்வால், ரேஸர்பே உரிமையாளர் சஷாங்க் குமார், மீஷோ (Meesho) உரிமையாளர்கள் விதித் அத்ரே, சஞ்ஜீவ் பன்ர்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் 26 இளம் கோடீஸ்வரர்களுடன் மும்பை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஷேர்சாட் உரிமையாளரான 31 வயது அங்குஷ் சச்சிதேவ் (Ankush Sachdeva) மிகவும் இளம் கோடீஸ்வரராக அறியப்பட்டுள்ளார்.
அதேபோல இந்த பட்டியலில் , இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பரிதா பாரிக் ஆகியோர் 32 வயது பெண் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இந்த பட்டியலில் மொத்தம் 7 பெண் கோடீஸ்வரர்கள் இடம் பிடித்துள்ளனர். இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த 13 பேரும், மும்பை ஐ.ஐ.டி.,யில் 13 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |