ரூ.1,290 கோடிக்கு சொந்தக்காரர்.,கணவரை பிரிந்து சாதித்து காட்டிய பெண்ணின் சாதனை கதை
கணவரை பிரிந்து ஒற்றை பெண்மணியாக தனது வாழ்க்கையை முன்னகர்த்த தொடங்கிய மீரா குல்கர்னி இன்று ரூ.1,290 கோடி மதிப்பிலான சொத்திற்கு சொந்தகாராகியுள்ளார்.
கேரேஜில் தொடங்கப்பட்ட நிறுவனம்
இந்த உலகில் பெண்கள் தங்களுக்குள் பெரும் ஆற்றலை புதைத்துக் கொண்டு வாழ்கிறார்கள், ஆனால் இத்தகைய பெரும் ஆற்றலை கண்டு கொண்ட நபர்கள் உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறி விடுகின்றனர்.
அந்த வகையில் தன்னுடைய பெரும் ஆற்றலால் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் தான் மீரா குல்கர்னி(Mira Kulkarni). 20 வயதில் திருமண உறவிற்குள் சென்ற மீரா குல்கர்னி, கணவரிடம் இருந்து பிரிந்து பெற்றோர்கள் வீட்டில் தனது 2 குழந்தையுடன் வாழத் தொடங்கினார்.
தன்னுடைய 28 வது வயதில் பெற்றோரின் மறைவுக்கு பிறகு வாழ்க்கையின் இடர்களை ஒற்றை ஆளாய் எதிர்கொள்ள தொடங்கினார்.
மீரா குல்கர்னி தன்னுடைய 45 வது வயதில் மெழுகுவர்த்திகள் மற்றும் கையால் செய்யப்பட்ட சோப்புகளை தயாரிக்க தொடங்கினார்.
2000 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆயுர்வேத கோட்பாடுகளை பின்பற்றி இந்தியாவின் முதல் ஆடம்பர தோல் பராமரிப்பு பொருட்களுக்கான ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ்(Forest Essentials) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
2 தொழிலாளர்களுடன் 2 லட்சம் முதலீட்டில் வீட்டின் கேரேஜில் தொடங்கப்பட்ட நிறுவனம், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் ஆதரவை ஈர்த்தது.
ரூ.1290 கோடி சொத்து
மீரா குல்கர்னியின் ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ்(Forest Essentials) நிறுவனமானது தற்போது இந்தியா முழுவதும் 28 நகரங்களில் 110 கிளைகள் கொண்டதாக விரிந்துள்ளது.
வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?
தாஜ் மற்றும் ஹயாட் ஆகிய 300 ஹோட்டல்களின் வாடிக்கையாளர்களை ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் கொண்டுள்ளது.
2020ம் நிதியாண்டில் ரூ.253 கோடியும், 2021ம் நிதியாண்டில் 210 கோடியும் இந்த நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது.
இதன் மூலம் ரூ.1290 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவராக மீரா குல்கர்னி உயர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mira Kulkarni, Forest Essentials, India's first domestic luxury skincare, Tehri Garhwal area, Hotel Taj, Hotel Hyatt, businessman Business, Money, Net-worth, India, India's richest women,