தாஜ் மஹால் முதல் வெடி சத்தம் வரை.., இந்தியாவில் தீர்க்கப்படாத மர்மங்கள்
இந்தியாவில் பல்வேறு மர்மமான இடங்களும், முடிவுக்கு வராத கதைகளும் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகளவில் பொறுத்தவரை பல மர்மமான விடயங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றை மக்கள் நம்புவதற்கு பயமா இல்லை வேறு காரணம் இருக்கிறதா என்று இன்றுவரை தீர்க்கப்படாமலே உள்ளது.
லடாக் காந்த மலை
இமயமலைக்கு அருகில் லடாக் பகுதி உள்ளது. இந்த பகுதியானது காந்த சக்தி நிறைந்த ஒரு இடமாக கருதப்படுகிறது.
இந்த இடத்தில் நாம் காரை பார்க் செய்து விட்டு நியூட்ரல் செய்துவிட்டோம் என்றால் கார் நகர்ந்து மேல் நோக்கி செல்லும் என்று கூறப்படுகிறது. அதுவும் 20 கிலோமீட்டர் வேகம் வரை செல்வதாக சொல்லப்படுகிறது.
இரட்டையர்கள் கிராமம்
ஒரு கிராமத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் இரட்டையர்களாக உள்ளனர் என்றால் நம்பமுடியாத ஒன்றாக தான் இருக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்த குழந்தைகள் இரட்டையர்கள் தான்.
இந்திய மாநிலமான கேரளா, கோடினி என்ற கிராமத்தில் மொத்தமாக 250 மேற்பட்ட இரட்டையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று இதுவரை தெரியாமலே உள்ளது.
தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் காதல் நினைவு சின்னமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தாஜ்மஹால் ஒரு கோவில் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது.
இதனை, ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் கல்லறையாக கட்டவில்லை என்றும், அது 300 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது என்றும் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தாஜ் மஹால் இருந்த இடம் முன்னதாக சிவன் கோவிலாக இருந்திருக்கும் என்றும் சொல்கின்றனர். இது இன்று வரை தீர்க்க முடியாத மர்மமாகவே உள்ளது.
வெடி சத்தம்
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜோத்புரில் கடந்த 2012 -ம் ஆண்டில் திடீரெனெ வெடி சத்தம் ஒன்று கேட்டது. அந்த சத்தமானது அணுகுண்டு சத்தம் போன்று பயங்கரமாக கேட்டுள்ளது.
ஆனால், அந்த சத்தம் விமானங்களில் ஏற்படும் காற்றழுத்த மாற்றம் என்று கூறுகின்றனர். ஆனால், அந்த சத்தம் கேட்டபோது எந்த ஒரு விமானமும் பறக்கவில்லை. இதுவும் தீர்க்க முடியாத மர்மமாகவே உள்ளது.
மர்ம நபர்கள்
அசோகா சக்ரவத்தியால் முதல் முதலாக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் முகம் தெரியாத 9 நபர்களை இல்லுமினாட்டி என்று அழைக்கின்றனர்.
இவர்கள் 9 பேரும் ஒவ்வொரு துறையில் வல்லுனர்களாக இருக்கின்றனர். இவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் சொல்கின்றனர். மேலும், இவர்களின் வாரிசுகள் உலகம் முழுவதும் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |