பிரான்ஸ்-இந்தியா புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு
இந்தியா, பிரான்ஸ் நாட்டின் Safron நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே போர் விமான எஞ்சின்களை தயாரிக்கவுள்ளது.
இந்த எஞ்சின்கள், இந்தியா உருவாக்கும் 5-ஆம் தலைமுறை AMCA (Advanced Medium Combat Aircraft) போர் விமானங்களில் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 23) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Safron மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான DRDO இணைந்து, புதிய என்ஜின் ஒன்றை உருவாக்கும் திட்டத்திற்கான வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த என்ஜின் 110 கிலோ நியூட்டன் உந்துசக்தியுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது AMCA-வின் இரண்டாவது பதிப்பான Mark-2ல் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், இந்தியா தனது விமான என்ஜின் தொழில்நுட்பத்தில் (Atmanirbhar Bharat) தன்னிறைவை அடையும் முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்.
Safron நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Safran fighter jet engine, India France defence deal, 5th generation fighter aircraft India, DRDO Safran engine partnership, Rajnath Singh jet engine announcement, AMCA Mark 2 engine thrust, Make in India aerospace, India defence technology news