330 ஓட்டங்கள் குவித்த இந்திய மகளிர்படை! பிறந்தநாளில் 5 விக்கெட் வீழ்த்தி திணறடித்த வீராங்கனை
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு 331 ஓட்டங்கள் வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
ஸ்மிரிதி மந்தனா, பிரதிகா ராவல் கூட்டணி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana) 66 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் 75 (96) ஓட்டங்கள் விளாசிய நிலையில் பிரதிகா ராவல் (Pratika Rawal) ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 22 (17) ஓட்டங்களில் வெளியேறினார்.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதிரடி காட்டிய ஜெமிமா ரோட்ரிகஸ் 33 (21) ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 32 (22) ஓட்டங்களும் விளாச, இந்திய அணி 330 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
அன்னபெல் சதர்லாண்ட் அபாரம்
ஆரம்பத்தில் ஓட்டங்களை வாரி வழங்கிய அன்னபெல் சதர்லாண்ட் (Annabel Sutherland), கடைசி கட்டத்தில் துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அவர் தனது பிறந்தநாளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் வீழ்த்தியிருக்கிறார்.
ஒருநாள் உலகக்கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் 2022யில் 317 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |