2026 காமன்வெல்த் போட்டிகளில் 4வது இடம் பிடித்த இந்தியா
2026 காமன்வெல்த் போட்டிகளில், 39 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
2026 காமன்வெல்த் தொடர்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

10 விளையாட்டுகள் இடம்பெற்ற இந்த தொடரில், 70 தங்கம், 45 வெள்ளி, 55 வெண்கலம் என மொத்தம் 170 பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம் பிடித்தது.
29 தங்கம், 45 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 110 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 19 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் உட்பட 62 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளது.
4வது இடத்தில் இந்தியா
இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.

குத்துசண்டை பிரிவில் மட்டும் இந்தியா 7 தங்கப்பதக்கங்களை வென்றது.
2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதே 4வது இடத்தை பிடித்திருந்தாலும், 21 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கள் வென்றிருந்தது.
1998 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 50 பதக்கங்களுக்கு குறைவாக வென்றுள்ளது.
கடந்த 2022 காமன்வெல்த் தொடரில் 19 விளையாட்டுகள் இருந்த நிலையில், தற்போது 10 போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
No Wrestling.
— The Khel India (@TheKhelIndia) August 2, 2026
No Badminton.
No Table Tennis.
No Hockey.
Yet, India managed to finish 4th at the Commonwealth Games 2026. 🇮🇳
THANK YOU, TEAM INDIA! 🙏 pic.twitter.com/cY2THFEkVv
துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், பூப்பந்து, மேசைப்பந்து, கள ஹாக்கி என இந்தியா பதக்கங்களை அள்ளும் விளையாட்டுகள் தொடரில் இருந்து நீக்கப்பட்டது இந்தியாவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
நிறைவு விழாவின் போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் கொடியையும், சடங்கு ரீதியான தடியையும் இந்தியாவிற்கு முறைப்படி வழங்கப்ட்டது. ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவர் பி.டி. உஷா ஆகியோர் இந்தியா சார்பில் அதனை பெற்றுக்கொண்டனர்.

அடுத்த காமன்வெல்த் போட்டிகளை 2030 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இந்தியா நடத்த உள்ளதால். இதில் அதிகளவிலான பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
𝐈𝐍𝐃𝐈𝐀’𝐒 𝐌𝐎𝐌𝐄𝐍𝐓 𝐇𝐀𝐒 𝐀𝐑𝐑𝐈𝐕𝐄𝐃! 🇮🇳✨
— The Khel India (@TheKhelIndia) August 3, 2026
IOA President PT Usha, Gujarat Deputy CM Harsh Sanghavi, and Neeraj Chopra received the Commonwealth Games Flag.
India officially takes over as host of the 2030 Commonwealth Games! 🏟️ pic.twitter.com/rXiT3wyKjt
முன்னதாக 2010 காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடைபெற்ற போது, இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்களுடன் 2வது இடம் பிடித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |