மத்திய கிழக்கில் மோதல் தீவிரம்- சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள இந்தியா
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியா சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலால், அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் பல வளைகுடா நாடுகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இதனால், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
[E7KH6V ]
இந்த சூழ்நிலையில், இந்தியா தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதுடில்லியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் இந்த கட்டுப்பாட்டு அறை, Toll-Free எண் 1800118797 அல்லது Landline எண்கள் 91-11-23012113, 91-11-23014104, 91-11-23017905 வழியாக இயங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா அங்கு உள்ள அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என மோடி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Middle East conflict, US Israel Iran war 2026, India control room Delhi #India #IranWar #Israel #MiddleEastConflict #Modi #IndianCitizens