20,000 இந்திய உயிர்களை பறித்த பாகிஸ்தானின் பயங்கரவாதம் - ஐ.நா.வில் வெடித்த இந்திய தூதர்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தானின் தவறான தகவல்களுக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா பல உண்மைகளை வெளியிட்டது.
பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக உருவாக்கும் பயங்கரவாதத்தை கடுமையாக விமர்சித்த இந்தியா, ஐக்கிய நாடுகளின் மேடையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) தொடர்பான பாகிஸ்தானின் போலியான பிரச்சாரத்தை முறியடித்துள்ளது.
ஐ.நா.வில் இந்திய நிரந்தர தூதராக உள்ள பர்வதநேனி ஹரீஷ், “பாகிஸ்தான் என்பது உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது” என்றும், கடந்த நான்கு தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்தியாவின் கடும் குற்றச்சாட்டு:
ஏப்ரல் 22-ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஏப்ரல் 23 அன்று இடைநிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், ஐ.நா.வில் “நீர் என்பது ஆயுதம் அல்ல, அது வாழ்க்கை” என்ற வகையில் புகார் முன்வைத்தது.
இதற்கு பதிலளித்த ஹரீஷ், “இந்தியாவின் பொறுமையும் பெருந்தன்மையும் உலகத்திற்கே எடுத்துக்காட்டு. ஆனால் பாகிஸ்தான் அதன் ஒப்பந்த கடமைகளை மீறி மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பழைய அணைகள் பலவீனமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய ஹரீஷ், “பாகிஸ்தான், பாதுகாப்பான நவீன தொழில்நுட்பம் கொண்ட அணை மாற்றங்களை தொடர்ந்து தடுக்கும் சூழ்நிலையில், இந்தியா தனது சட்டபூர்வமான உரிமைகளைப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Pakistan UN 2025, Indus Waters Treaty suspended, Parvathaneni Harish UN speech, Pahalgam attack response, India slams Pakistan terrorism, cross-border terror India, 20000 Indians killed in terror, India UN Indus water dispute