பாகிஸ்தான் பிறந்த நாளிலிருந்தே பொய் சொல்ல தொடங்கிவிட்டது: இந்திய வெளிவிவகார செயலாளர் கடுமையான பதிலடி
பாகிஸ்தான், இந்திய ஜெட்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பொய்யான புகாரை இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமையன்று தீவிரமாக மறுத்தார்.
"ஆபரேஷன் சிந்தூர்" கீழ் இந்தியா பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் மேற்கொண்ட குற்றச்சாட்டுகள் மீது இந்திய அரசு நேரடியாக பதிலளித்தது.
மிஸ்ரி கூறியதாவது:
“பாகிஸ்தான் 1947-இல் பிறந்த நாளிலிருந்தே பொய் கூற தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரை கைப்பற்றும் போது, ஐக்கிய நாடுகள் முன் ‘எங்களுக்கு தொடர்பே இல்லை’ என்று சொன்னதே அதன் ஆரம்பக் கதையாகும்.”
அவர் மேலும் கூறிஎதாவது., “நீலம்-ஜெலம் அணை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது முழுக்க முழுக்க பொய். இந்தியா தாக்கியது பயங்கரவாத முகாம்களையே. இத்தகைய போலியான புகார்கள் மூலம் பாகிஸ்தான் இந்திய குடிநீர், மின்சாரம் போன்ற இன்றியமையாத வளங்களை இலக்காக்கும் முனைப்பில் இருந்தால், அதற்கான முழு பொறுப்பும் அவர்களமே ஏற்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.
விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானை "பயங்கரவாதத்தின் மையமாக" குற்றம் சாட்டியுள்ளார்.
“உலகின் அதிகமான யு.என் மற்றும் சர்வதேச தடையுள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கின்றனர். ஒசாமா பின் லாடன் எங்கே இருந்தார் என்பதை நினைவுபடுத்த தேவையில்லை – அவர்களை ‘மரணம் அடைந்த வீரர்’ என்று யார் அழைத்தது என அனைவருக்கும் தெரியும்.” என கூறினார்.
#WATCH | Delhi: On Pakistan's propaganda that it downed Indian jets, Foreign Secretary Vikram Misri says, "...There is nothing surprising in it. After all, this is a country that started lying as soon as it was born. In 1947, when the Pakistani army claimed Jammu and Kashmir,… pic.twitter.com/fgmtES2tCo
— ANI (@ANI) May 8, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |