ஹமாஸ் பாணியில் பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்., தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்
ஜம்முவில் பாகிஸ்தானின் ஹமாஸ் பாணி ஏவுகணைகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.
ஜம்முவில் வியாழக்கிழமை நள்ளிரவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான், சட்வாரி, சாம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து 8 ஏவுகணைகளை ஏவியது.
ஆனால் இந்தியாவுடைய உயர் மட்ட வான் பாதுகாப்பு (Air Defence) அமைப்புகள் அனைத்தையும் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தின.
பாதுகாப்புத் தரப்பின் தகவலின்படி, இந்த தாக்குதலால் எந்த உயிரிழப்பும் இல்லை. இது இந்தியாவின் திடமான பாதுகாப்புத் தயார்நிலை மற்றும் நேரடி ராணுவ செயற்பாடுகளுக்கான திறனை வலியுறுத்துகிறது.
புதிய போர் யுக்தி – ஹமாஸ் பாணி தாக்குதல்
ஜம்முவில் எடுக்கப்பட்ட காட்சிகளில், குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட, வேகமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது ஹமாஸ் இஸ்ரேலின் மீது நடத்திய தாக்குதல்களை நினைவூட்டும் வகையில் உள்ளது. ராணுவ ஆய்வாளர்கள் இது பாகிஸ்தானின் போர் யுக்தியில் ஆழமான மாற்றமாகும் என கூறுகின்றனர்.
"இது பாரம்பரிய ராணுவ மோதல் அல்ல; மனஉளைச்சலை உருவாக்கும் பயங்கரவாத பாணி நடவடிக்கை," என ஒரு மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ISI - ஹமாஸ் கூட்டிணைப்பு?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் கடந்த மாதம் ISI மற்றும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கிடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக இரகசிய பிரிவுகளின் தகவல் தெரிவிக்கின்றன.
இத்தகவலும், இந்நள்ளிரவுத் தாக்குதலும் சேர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத குழுக்களின் யுக்திகளை பின்பற்றி செயல்படுகிறது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்திய அரசு, அமைதி முதன்மை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஆனால், இறையாண்மையை பாதிக்கும் எந்த விதமான முயற்சிக்கும் சரியான பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |