இந்தியா-இலங்கை படகு சேவை மீண்டும் தொடங்கியது!
இரண்டு மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை (பிப்ரவரி 22) இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கணேசன்துறைக்கு 83 பயணிகளுடன் புறப்பட்டது, மேலும் செவ்வாய்க்கிழமைகளைத் தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, இந்தியாவிலிருந்து இலங்கைக்கான படகு சேவை நவம்பர் 18, 2024 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும் பயணிகள் தங்களுடன் 10 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துச் செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |