இந்தியா தாக்கியபோது பதுங்குகுழியில் ஒளிந்துகொண்ட பாகிஸ்தான் இராணுவ தலைவர்
பாகிஸ்தான் வான் தளத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் இராணுவ தலைவர் பதுங்குகுழியில் ஒளிந்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் துல்லியமான ஏவுகணை தாக்குதல் இஸ்லாமாபாத் அருகே உள்ள நூர் கான் வான் தளத்தை தாக்கிய பிறகு, பாகிஸ்தான் இராணுவத் தலைமை ஜெனரல் அஸிம் முனீர் அவசரமாக ராவல்பிண்டியில் உள்ள ஜெனரல் தலைமை தளபதியின் பங்கருக்குள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் இந்தியாவின் தாக்குதல்களில் மிகப்பெரியதாகவும், பாகிஸ்தானில் உள்ள 11 முக்கிய வான் தளங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து நடந்துள்ளதாக இந்திய DGMO லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கை தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் நூர் கான், முரித், சியால்கோட், பசுரூர், ஜேக்கோபாபாத் உள்ளிட்ட தளங்கள் தாக்கப்பட்டன.
நூர் கான் தளம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிற்கு மிக அருகே (10 கிமீ) அமைந்துள்ளதுடன், விமான போக்குவரத்து பிரிவுகள், எரிவாயு நிரப்பு யூனிட்டுகள், மற்றும் பாகிஸ்தான் வான் படையின் முக்கிய பயிற்சி மையங்களை கொண்டுள்ளது.
மேலும், இங்கு நாடு முழுவதும் பரவியுள்ள அணு ஆயுதங்களை கண்காணிக்கும் ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் டிவிஷனின் தலைமையகம் அருகில் உள்ளது.
சீனாவின் MIZAZVISION மற்றும் இந்தியாவின் Kawa Space வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில், நூர் கான் தளத்தில் ஏற்பட்ட பாரிய சேதம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. எரிவாயு ட்ரக்குகள் மற்றும் களஞ்சியக் கட்டடங்கள் நாசமடைந்துள்ளன.
இந்த தாக்குதல், பாகிஸ்தானுக்குள் ஆழமாக இறங்கி தாக்கும் இந்தியாவின் திறன் குறித்து நாட்டில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இரு அணு சக்தி நாடுகளும் பின்னர் நிலைதடுமாறாமல் சமாதானமாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உடன்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Pakistan airstrike 2025, Nur Khan airbase attack, Asim Munir bunker news, India hits Pakistan airbases, BrahMos missile Pakistan, SCALP missile strike Pakistan, Indo-Pak conflict May 2025, Indian military operation Nur Khan, Strategic airbase strike Pakistan, Pakistan nuclear base under threat