நடுவானிலே ICBM ஏவுகணைகளை அழிக்கும் திறன் - இந்தியாவின் சோதனை வெற்றி
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO), "பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு" (Multi-layered Ballistic Missile Defence - BMD) திறனை நிரூபிக்கும் வகையில் 2 நாட்களில் 3 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு சோதனை
2,000 கி.மீ முதல் 5,000 கி.மீ வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்துத் தாக்கி அழிக்கும் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதே போல், கடற்படைக்கான நடுத்தர தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் (NASM-MR) முதல் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இது கடல் மட்டத்திற்கு மிக அருகில் பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் முழுவதுமாகவே இந்தியாவின் அதிநவீன உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கும் திறன் கொண்ட உலகின் மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
DRDOவிற்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "பல்வேறு வகையான எதிரி அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் பல முக்கிய தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
The @DRDO_India has successfully demonstrated multiple crucial technologies bolstering nations defence capabilities against different types of enemy threats.
— Rajnath Singh (@rajnathsingh) June 13, 2026
Three consecutive flight-tests were successfully conducted to demonstrate multi-layered defence against long range… pic.twitter.com/0DKQF0LB30
வளர்ந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த அமைப்புகள் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |