அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் K-4 ஏவுகணை சோதனை வெற்றி.., சாதனை படைத்த இந்தியா
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய கே-4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
K-4 ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா தனது பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதற்காக பாதுகாப்பு படையில் அதி நவீன ஆயுதங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.
அந்தவகையில், வங்காள விரிகுடாவில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சுமார் 3,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்துள்ளது.
இந்த சோதனையின் மூலம், நிலம், வான் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு ஆயுத ஏவுகணையை செலுத்தும் திறன் கொண்ட சில நாடுகளின் ஒரு பகுதியாக இந்தியா மாறியுள்ளது.
விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் அரிகாட் (INS Arighaat) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கே-4 ஏவுகணை, நவம்பர் 27 -ம் திகதி சோதிக்கப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பலிஸ்டிக் ரக ஏவுகணையை (ballistic missile) இந்தியா பரிசோதிப்பது இதுவே முதல்முறையாகும்.
கே4 (K-4) பிரிவைச் சோ்ந்த இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை செலுத்த முடியும். திட எரிபொருள் ஏவுகணை கடந்த சில ஆண்டுகளில் நீரில் மூழ்கக்கூடிய தளங்களில் இருந்து குறைந்தது ஐந்து முறை சோதிக்கப்பட்டது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |