100 கிமீ தாக்கும் திறன்., இந்தியாவின் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் புதிய அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாட்டில் முக்கியமான ஒரு புதிய வெற்றியாக, ‘அஸ்திரா’ (Astra) என்ற உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணை (Air-to-Air Missile) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) தெரிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
சோதனை எங்கு நடைபெற்றது?
2025 ஜூலை 11 அன்று, ஒடிசாவின் கடற்கரையை ஒட்டி Sukhoi-30 MK-I போர் விமானத்தில் இருந்து Astra ஏவுகணை ஏவப்பட்டது.
சோதனையில், அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குகளை வெற்றிகரமாக வீழ்த்தியுள்ள இந்த ஏவுகணை, துல்லியமான தாக்கத்தால் தனது செயல்திறனை நிரூபித்தது.
முக்கிய அம்சம் – RF சீக்கர்
இந்த ஏவுகணையின் சிறப்பம்சம் அதன் RF seeker (Radio Frequency) ஆகும். இது இலக்குகளை கண்டறிந்து தாக்குவதற்காக மிகவும் முக்கியமான ஒரு உதிரி பாகமாகும்.
இது முழுமையாக DRDO-வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிகப்பாரிய சாதனையாகும்.
100 KM Range
100 கி.மீ.க்கு மேல் பாயும் திறன் கொண்ட இந்த Astra BVRAAM ஏவுகணை, நவீன வழிநடத்தல் மற்றும் வழிகாட்டி (Guidance & Navigation) அமைப்புகளுடன் கூடியது.
இந்த திட்டத்தில் DRDO-வின் பல ஆய்வகங்கள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன.
இந்த வெற்றியை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் DRDO தலைவர் சமீர் வி. கமத் பாராட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Astra missile test India 2025, DRDO air-to-air missile, Astra BVRAAM RF seeker, Indian Air Force missile test, Su-30 Astra missile launch, Astra missile range 100 km