வலுவடையும் இந்தியா-சுவிட்சர்லாந்து உறவுகள் - 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
India, Switzerland Sign 5 Key Agreements: இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
அக்டோபர் 5 அன்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி காய் பார்மெலின் இடையே நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் இவை உறுதி செய்யப்பட்டன.

இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, கலாசாரம் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தன. இந்திய ஏற்றுமதிகளுக்கு சுவிட்சர்லாந்தில் சந்தை அணுகலை விரிவுபடுத்தவும், முதலீட்டை எளிதாக்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்:
1- இடம்பெயர்வு மற்றும் இயக்கம் ஒப்பந்தம் (MMP): பலமுறை நுழைவு விசா (5 ஆண்டுகள் வரை), மாணவர்களுக்கு 1 ஆண்டு அனுமதி, சட்டவிரோத இடம்பெயர்வை தடுக்கும் நடவடிக்கைகள்.
2- இளம் தொழில்முனைவோர் பரிமாற்றம் (YPS): ஆண்டுதோறும் 300 பேர் பரிமாற்றம், பின்னர் 500-ஆக உயர்த்தலாம். 30/90 நாட்களில் குடியுரிமை சரிபார்ப்பு.
3- போக்குவரத்து தொழில்நுட்ப ஒத்துழைப்பு: மின்சார வாகனங்கள், ரோப்-வே, சுரங்கங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து அமைப்புகள்.
4- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு: இந்திய DST மற்றும் Swiss National Science Foundation இடையே நீண்டகால ஆராய்ச்சி கூட்டாண்மை.
5- புதுமை மற்றும் தொழில்முனைவு ஒத்துழைப்பு: ஆரம்ப நிலை Startups-க்கு பயிற்சி, பரிமாற்றம், கூட்டு பணிமனைகள், திறன் மேம்பாடு.
சவுதி அரேபியாவுக்கு இராணுவப்படைகளை அனுப்பும் துருக்கி, பாகிஸ்தான் - செயல்படுத்தப்பட்ட மெக்கா பாதுகாப்பு கூட்டணி
இந்தியா-சுவிட்சர்லாந்து உறவுகள் 1948-ஆம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்துடன் தொடங்கியது. தற்போது, சுவிட்சர்லாந்து இந்தியாவின் 15வது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது; 330-க்கும் மேற்பட்ட சுவிஸ் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
இந்த ஒப்பந்தங்கள், இரு நாடுகளின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |