இந்தியா சோதனை செய்துவரும் ET-LDHCM ஏவுகணை: Mach 8 வேகம், 1500 கிமீ தாக்கும் திறன்
இந்தியா புதிய தலைமுறை Hypersonic ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது எட்டு மடங்கு ஒலிவேகத்தில் (Mach 8) பறந்து 1,500 கிமீ வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணையை, DRDO Project Vishnu என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
இது, தற்போது இந்தியாவிடம் உள்ள BrahMos ஏவுகணையைவிட மூன்று மடங்கு வேகமும் நான்கு மடங்கு தூரத்தையும் கொண்டதாகக் கூறப்படுகிறது.
BrahMos ஏவுகணையின் அதிகபட்ச வேகம் Mach 3 (மணிக்கு சுமார் 3,675 கிமீ) ஆகும்.
வல்லரசுகளுக்கே எதிரான முன்னேற்றம்
இந்த Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM), Scramjet எனப்படும் புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இது, வழக்கமான Rotating Compressor இல்லாமல், வாயுமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை நேரடியாக பயன்படுத்தி சக்தியை உருவாக்குகிறது.
முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, பாதுகாப்பு ஒட்டுமொத்த தளத்தையும் மேம்படுத்தும் திறனைக் கொண்டது.
இது அணுஆயுதம் மற்றும் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் பல ஆயுதங்களை தாங்கக்கூடியது. மேலும், தாழ்வான உயரத்தில் பறப்பதால் ரேடார் கண்காணிப்பில் சிக்காது.
ET-LDHCM, நிலம், கடல் மற்றும் வானில் இருந்து ஏவக்கூடியது. Mach 8 வேகத்திலும் 2,000°C வரை வெப்பத்தை தாங்கும் வசதியுடன், இது சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையாக இந்தியாவையும் Hypersonic சக்தியாக மாற்றும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India hypersonic missile test 2025, DRDO Project Vishnu, ET-LDHCM missile range speed, Mach 8 missile India, Hypersonic missile vs BrahMos, India defence news today, Indian missile technology advancement