இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த ஆயுதம்., பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவுக்கு கவலை
பாகிஸ்தான், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளுக்கு கவலையளிக்கும் வகையில், இந்தியா புதிய சக்திவாய்ந்த ஆயுதத்தை உருவாக்கியுள்ளது.
கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான Garden Reach Shipbuilders and Engineers Limited (GRSE), நாட்டின் முதல் தேசிய உற்பத்தியில் உருவாக்கப்பட்ட 30 மிமீ கடல் தள ஆயுதத்தின் (Naval Surface Gun) வெற்றிகரமான கடல் சோதனையை நடத்தியுள்ளது.
இந்த பரிசோதனை, GRSE வடிவமைத்து கட்டிய Anti-Submarine Warfare Shallow Water Craft போர்க்கப்பலில் நடைபெற்றது. இது, இந்திய கப்பல்துறை தயாரிப்பில் இருந்து ஆயுத உற்பத்திக்குள் GRSE நுழைந்திருப்பதற்கான மிகப்பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த ஆயுதம், தேசிய எலெக்ட்ரோ-ஆப்டிகல் ஃபயர் கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடியதாக இருக்கிறது. இதன் மூலம் இலக்குகளை மிகுந்த துல்லியத்துடன் தாக்க முடியும். சிறிய போர் கப்பல்களில் முதன்மை ஆயுதமாகவும், பாரிய கப்பல்களில் இரண்டாம் நிலை பாதுகாப்பு ஆயுதமாகவும் இது பயன்படுத்தப்படும்.
இந்த 30 மிமீ கடல் தள ஆயுதத்திற்கு இந்திய கடற்படை முதல் 10 ஆயுதங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. GRSE, ஹைதராபாத் நிறுவனமான BHSEL மற்றும் Elbit Systems Land உடன் இணைந்து இந்த ஆயுதத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஆயுதம் வெற்றிகரமாக செயல்படுவது, நேரடியாக பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு எச்சரிக்கையாகும். மேலும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சுயசார்பு மற்றும் உற்பத்தித் திறன் வளர்ச்சிக்கான முக்கிய எடுத்துக்காட்டாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India 30mm Naval Gun, GRSE Naval Surface Gun, Indian Navy new weapon, Anti-submarine warfare gun, India defense self-reliance, Pakistan China military threat, Made in India weapon system, Electro optical fire control gun, Indian indigenous naval gun, GRSE defense manufacturing India