சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா
உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி திறனை சிவில் மற்றும் ராணுவத் துறைகளில் அதிகரிக்க 234 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 2,000 கோடிக்கு மேல்) ஊக்கத் திட்டத்தைத் தொடங்க இந்தியா தயாராகி வருகிறது.
ட்ரோன்கள் பக்கம்
உலகெங்கிலும் மோதல்களில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாலும், அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் சீனா, துருக்கி போன்ற நாடுகளுடனான ஆயுதப் போட்டி அதிகரித்து வருவதற்கும் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது மூன்று ஆண்டுகளுக்கு செயல்படும். அத்துடன் ட்ரோன்கள், உதிரி பாகங்கள், மென்பொருள், எதிர்-ட்ரோன் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை உற்பத்தி செய்வதற்கான நிதி உதவியை வழங்கும்.
மே மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடன் நான்கு நாள் மோதல் வெடித்ததன் பின்னரே இந்தியாவின் பார்வை ட்ரோன்கள் பக்கம் திரும்பியுள்ளது. முதல் முறையாக அணு ஆயுதம் ஏந்திய இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எதிராக ட்ரோன்களை தீவிரமாகப் பயன்படுத்தின.
உள்நாட்டு ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கு இந்த மோதல் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்தப் புதிய முயற்சி, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் வழிநடத்தப்படும்.
தற்போது இறக்குமதி
2028 ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிதியாண்டின் இறுதிக்குள், முக்கிய ட்ரோன் உதிரி பாகங்களில் குறைந்தது 40 சதவீதமாவது இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இது இந்தியா தற்போது இறக்குமதி செய்யப்படும் பாகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும், அவற்றில் பல முழுமையான ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும் சீனாவிலிருந்து வருகின்றன.
இந்த நிலையிலேயே 234 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புதிய திட்டத்துடன் இந்தியா களமிறங்கியுள்ளது. இந்த முடிவு துருக்கி மற்றும் சீனாவையே நம்பியிருக்கும் பாகிஸ்தானிற்கும்,
இந்தியாவை முதன்மையான எதிரி நாடுகளில் ஒன்றாக பாவிக்கும் சீனாவிற்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தப்போவது உறுதி என்றே நிபுணர்கள் சிலரது கூற்றாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |