வரிகளைக் குறைத்து... ரூ 4,200 கோடிக்கு அமெரிக்க கோதுமை வாங்கவும் முடிவெடுத்த ஆசிய நாடு
வரி விதிப்பு பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கியப் பொருட்களுக்கான வரிகளை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைக்கவும், 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க கோதுமையை வாங்கவும் இந்தோனேசியா முன்வந்துள்ளது.
இறக்குமதியை அதிகரிக்க
இந்தோனேசியாவின் தலைமைப் பொருளாதார அமைச்சர் ஏர்லாங்கா ஹார்டார்டோ தெரிவிக்கையில், நாட்டின் விமான சேவை நிறுவனமான கருடா அமெரிக்காவுடனான 34 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கூடுதல் போயிங் விமானங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் 17.9 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தக உபரியை இந்தோனேசியா நடத்தியுள்ளது.
இருப்பினும் அமெரிக்க சந்தைகளில் 32% வரியை எதிர்கொள்கிறது. மட்டுமின்றி இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளை எளிதாக்க அமெரிக்க இறக்குமதியை அதிகரிக்கவும் தற்போது முன்மொழிந்துள்ளது.
விவசாயப் பொருட்கள் உட்பட முக்கிய அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான வரிகளை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைக்க இந்தோனேசிய அரசாங்கம் முன்வந்துள்ளதாக அமைச்சர் ஏர்லாங்கா தெரிவித்துள்ளார்.
கனிமத் திட்டங்களில் முதலீடு
மேலும், கருடா நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து 75 போயிங் விமானங்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோதுமை கொள்முதலும் அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இதன் அடிப்படையில், அமெரிக்காவிடம் இருந்து 500 மில்லியன் டொலர், இந்திய மதிப்பில் ரூ 4,275 கோடி மதிப்பிலான கோதுமை வாங்கவும் இந்தோனேசியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தோனேசியாவிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதியில் சோயாபீன்ஸ், பெட்ரோலிய வாயுக்கள் மற்றும் விமானங்கள் அடங்கும் என்று இந்தோனேசிய அரசாங்க தரவுகள் காட்டுகின்றன.
மேலும், முக்கியமான கனிமத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் இந்தோனேசியா அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளது, இதில் நாட்டின் ஏராளமான செம்பு, நிக்கல் மற்றும் பாக்சைட் வளங்களும் அடங்கும் என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |