மாலத்தீவு, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியா.., மோடியின் லட்சத்தீவு பயணத்திற்கு பின் முக்கிய நகர்வு
மாலத்தீவு, சீனா மற்றும் அண்டை நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக மினிகாய், அகாட்டி தீவுகளில் புதிய கடற்படை தளங்களை இந்தியா அமைக்கிறது.
புதிய கடற்படை தளங்கள்
மாலத்தீவில் உள்ள புதிய ஆட்சியாளர்களால் இந்தியாவைப் புறக்கணித்ததோடு, சீனாவுடன் நெருக்கமாக சேர்ந்துள்ளது. அதோடு, இந்திய துருப்புகளை வெளியேறுமாறும் மாலத்தீவு காலக்கெடு விதித்துள்ளது. அதுபோல சீனாவின் உளவுகப்பலுக்கும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இப்படியான உரசல் மற்றும் உளவு முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய கடற்படை தளங்களை இந்தியா அமைக்கிறது. முன்னதாக மாலத்தீவு சுற்றுலாத் தலத்துக்கு மாற்றாக லட்சத்தீவுகள் மூலம் பிரதமர் மோடி கொடுத்த பதிலடியை அடுத்து புதிய கடற்படை தளங்களை நிர்மாணித்து தனது கடல் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
மினிகாய் கடற்படை தளத்தை திறப்பதற்காக மார்ச் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், INS Vikramaditya மற்றும் INS Vikrant போர்க்கப்பல்கள் சூழ பயணம் மேற்கொள்கிறார்.
இதன்மூலம், தென்கிழக்கு ஆசியா மற்றும் வட ஆசியாவிற்கான பில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தகத்தை இந்தியா ஊக்குவிக்க முடியும்.
இந்தியாவின் முக்கிய நகர்வு
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்திற்குப் பிறகு இந்தியா எடுக்கும் முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக மினிகாய் தீவில் விமான ஓடுதளத்தை உருவாக்கவும், அகாட்டி தீவில் உள்ள விமான தளத்தை மேம்படுத்தவும், ஐஎன்எஸ் ஜடாயுவை நிலைநிறுத்தவும் பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.
இது, இந்தியாவின் அதிகாரத்தை முன்னிறுத்த சிறப்பான உத்தியாக பார்க்கப்படுகிறது. லட்சத்தீவு, மினிகாய் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் புவியியல் இருப்பிடம், இந்தியப் பெருங்கடலில் வேகமாக விரிவடையும் சீன கடற்படையின் சவால்களை எதிர்கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |