அண்டை நாட்டின் அச்சுறுத்தல்.., ரூ.44000 கோடி மதிப்பில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தை தொடங்கும் இந்தியா
சீனா அச்சுறுத்தலுக்கு இடையே ரூ.44000 கோடி மதிப்பில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தை மீண்டும் இந்திய அரசு தொடங்குகிறது.
கண்ணிவெடி அகற்றும் திட்டம்
கப்பல் போக்குவரத்தை சீர்குலைப்பதற்காக எதிரி நாடுகள் கடலுக்கு அடியில் வைத்துள்ள கண்ணிவெடிகளை அழிக்க 12 சிறப்பு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்கும் திட்டத்தை நீண்ட காலமான இந்தியா நிலுவையிலே வைத்துள்ளது.
இந்நிலையில், அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தலால் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் கடல்சார் அச்சுறுத்தல்கள், குறிப்பாக சீனாவின் விரிவடைந்து வரும் கடற்படை இருப்பு மற்றும் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் நீருக்கடியில் போர் திறன் ஆகியவற்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விரைவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமிருந்து இறுதி அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், முதல் கண்ணிவெடி அகற்றும் கருவி சுமார் ஏழு ஆண்டுகளில் தொடங்கப்படலாம்.
கப்பல் பாதைகளை சீர்குலைக்கவும், துறைமுகங்களை நெரிக்கவும், வணிக மற்றும் பாதுகாப்பு கப்பல்களை அச்சுறுத்தவும் எதிரிகளால் போடப்பட்ட நீருக்கடியில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றவும், கண்காணிக்கவும் கடற்படைக்கு ரூ.44,000 கோடியில் 12 மேம்படுத்தப்பட்ட கண்ணிவெடி கப்பல்களை (எம்சிஎம்வி) கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது எந்த ஒரு பிரத்யேக கண்ணிவெடி அகற்றும் கருவியும் இல்லை, இது ஒரு மூலோபாய பாதகமாக உள்ளது. அதேபோல, பாகிஸ்தானும் தனது கடற்படையை நவீனமயமாக்கி வருகிறது.
மேலும் சீனாவிடமிருந்து புதிய யுவான்-வகுப்பு டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற உள்ளது, இது பிராந்திய பாதுகாப்பு சவால்களை மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தை இந்திய அரசு மீண்டும் தொடங்கவுள்ளது.
இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களை கொண்ட 7,516 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்க 24 எம்சிஎம்வி-க்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |