கடற்படை, கடலோர காவல்படைக்கு 76 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டம்
இந்திய கடற்படை, கடலோர காவல்படைக்கு 76 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய பாதுகாப்பது அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
51 ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படைக்கு, 25 ஹெலிகாப்டர்கள் கடலோர காவல்படைக்கும் ஒதுக்கப்படவுள்ளன.
இந்த ஹெலிகாப்டர்கள் கடல் மீட்பு பணிகள், பேரிடர் மேலாண்மை, படைவீரர்கள் மற்றும் சரக்குகளை கொண்டுசெல்லுதல் உள்ளிட்ட பல்வேறு கடல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த ஹெலிகாப்டர்கள் இரவு, பகல் இரண்டிலும் செயல்படக்கூடியவையாக இருக்க வேண்டும்.
மேலும், 5.5 டன் வரை பாரம் தூக்கக்கூடிய திறன் கொண்ட இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர்களாக இருக்கவேண்டும். கப்பல்களின் மேல் பறக்கும்வகையில் வடிவமைக்கப்படவேண்டும்.
தீவிரமான சூழ்நிலைகளில் தாக்குதலுக்கு பயணப்படுத்தக்கூடிய அளவிற்கு கனரக இயந்திர துப்பாக்கிகள் அல்லது நடுத்தர இயந்திர துப்பாக்கிகள் அதில் இருக்கவேண்டும்.
அதேசமயம், எதிரிகளின் தாக்குதலால் ஹெலிகாப்டர் சேதமடையாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களும் தேவை என பல அம்சங்கள் கொண்டதாக இருக்கவேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலேயே உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |