200 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டம் - Chetak, Cheetah-களை மாற்ற முயற்சி
இந்திய இராணுவம் மற்றும் விமானப்படைகளுக்கு 200 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 1960-களில் இருந்து சேவையில் உள்ள பழைய Chetak மற்றும் Cheetah ஹெலிகாப்டர்களை மாற்றும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதற்காக 200 புதிய இலகுரக ஹெலிகாப்டர்களை (Reconnaissance and Surveillance Helicopters - RSH) வாங்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதில், 120 ஹெலிகாப்டர்கள் இந்திய இராணுவத்திற்கும், 80 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும் வழங்கப்படவுள்ளன.
இந்த புதிய இலகுரக ஹெலிகாப்டர்கள் - பகல் மற்றும் இரவு கண்காணிப்பு, சிறப்பு படைகளுக்கான போக்குவரத்து, மீட்புப் பணிகள், தாக்குதல் ஹெலிகாப்டர்களுடன் இணைந்து scout பணி, சிவில் நிர்வாக உதவி போன்ற பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.
இந்த ஹெலிகாப்டர்கள் உயரமான மலைப்பகுதிகள் மற்றும் முன்னணி எல்லைப் பகுதிகளில் செயல்படக்கூடியவையாக இருக்க வேண்டும். தற்போதைய Chetak மற்றும் Cheetah ஹெலிகாப்டர்கள் பல ஆண்டுகளாக இப்பணிகளில் முக்கிய ஆதாரமாக இந்துள்ளன.
இந்த திட்டம் Make In India முயற்சிக்கு ஏற்ப இந்திய விமான நிறுவனங்கள் தனியாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகவோ தயாரிக்கலாம்.
இது இந்திய விமான தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் உதவியாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Defence Helicopters, Indian Army Helicopters, Indian Air Firce Helicopters, Chetak Cheetah Helicopters, Make in India Helicopters, 2025 Helicopters acquisition plan