இந்தியாவின் Akash-1S ஏவுகணையை வாங்க சீனாவின் பரம எதிரி நாடு திட்டம்
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் Akash-1S ஏவுகணையை வாங்க சீனாவின் எதிரி நாடொன்று திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பான இந்தியாவின் Akash-1S ஏவுகணை, ஒரு mid range Surface-to-Air வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டுவீழ்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில், பாகிஸ்தானின் Fateh-1 ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.
140 கி.மீ. range கொண்ட Fateh-1 ஏவுகணை stealth தொழில்நுட்பம் கொண்டது. ஆனால், இந்தியாவின் Akash-1S ஏவுகணை அதனை நடுவானில் 5 கி.மீ. உயரத்தில் துல்லியமாக சுட்டு வீழ்த்தியது.
தென் சீனக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக சீனாவுடன் நிலவி வரும் பதற்றம் காரணமாக, பிலிப்பைன்ஸ் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த முயற்சிக்கிறது.
இந்நிலையில், Akash-1S ஏவுகணையின் வெற்றிகரமான தடுப்பு திறன் காரணமாக, சீனாவின் கடல் பகுதி எதிரி நாடான பிலிப்பைன்ஸ், அதன் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் Akash-1S ஏவுகணையை இந்தியாவிடமிருந்து வாங்க ஆர்வம் காட்டியுள்ளது.
இது, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு நட்புறவிற்கு மேலும் வலுசேர்க்கவுள்ளது. மேலும், இது சீனாவிற்கு மிகப்பாரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் BrahMos ஏவுகணை ஏற்கெனவே பல நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், இப்பொது Akash-1S ஏவுகணையும் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியில் முக்கிய இடம்பிடிக்கவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indias Akash-1S Missile, India Philippines Realation, India China Rivalry, Suraface to air Missile, India Missile Export, Operation Sindoor, Akash-1S vs Fateh-1