ஐரோப்பிய இறக்குமதி கார்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகை அளிக்க இந்தியா திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரிகளை, 110 சதவீதம் என்ற உயர் மட்டத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
வரிச்சலுகை எளிதாக்கும்
15,000 யூரோக்களுக்கு மேல் (17,739 டொலர்) இறக்குமதி விலை கொண்ட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கான வரியை உடனடியாகக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், தற்போதைய இந்த 40 சதவீத வரி என்பது படிப்படியாக 10 சதவீதம் என குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோக்ஸ்வேகன், மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களுக்கு இந்திய சந்தையில் நுழைவதை இந்த வரிச்சலுகை எளிதாக்குகிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், நீண்ட காலமாக நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததை செவ்வாய்க்கிழமை அன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, இரு தரப்பினரும் விவரங்களை இறுதி செய்து, அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பார்கள்.
இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தக்கூடும், மேலும் ஆகஸ்ட் மாத இறுதி முதல் அமெரிக்காவின் 50 சதவீத வரியால் பாதிக்கப்பட்ட ஜவுளி மற்றும் நகைகள் போன்ற இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.
விற்பனையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாகும், ஆனால் அதன் உள்நாட்டு வாகனத் தொழில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
மின்சார வாகனங்களுக்கு
தற்போது இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது இந்திய அரசாங்கம் 70 சதவீதம் மற்றும் 110 சதவீதம் வரிகளை விதிக்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் எலோன் மஸ்க் உட்பட பல உயர் அதிகாரிகள் இந்த வரி விகிதத்தை அடிக்கடி விமர்சித்து வருகின்றனர்.
வெளியான தகவலின் அடிப்படையில், ஆண்டுக்கு சுமார் 200,000 combustion இயந்திர கார்களுக்கான இறக்குமதி வரிகளை இந்தியா உடனடியாக 40 சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்துள்ளது.

ஆனால், இந்தியாவின் Mahindra & Mahindra மற்றும் Tata Motors நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பேட்டரி மின்சார வாகனங்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி வரிச் சலுகைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மின்சார வாகனங்களுக்கும் இதேபோன்ற வரிச் சலுகைகள் வழங்கப்படும். ஆண்டுக்கு 4.4 மில்லியன் யூனிட்கள் கொண்ட இந்தியாவின் கார் சந்தையில், ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்கள் தற்போது 4 சதவீதத்திற்கும் குறைவான பங்கைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |