2027-க்குள் ஜேர்மனியை முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியா
இந்தியா 2027-ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனியை முந்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டீப் டெக் மாநாட்டில் பேசிய அவர், கடந்த 11.5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்து தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், 2 ஆண்டுகளில் ஜேர்மனியை முந்தி மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் 2025-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 5.01 டிரில்லியன் டொலர் ஆகும். இந்தியா 5 டிரில்லியன் டொலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கான பாதையில் உள்ளது.
2047-ஆம் ஆண்டுக்குள் 32 டிரில்லியன் டொலர் பொருளாதார இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.

மேலும், 2014-ல் 250 மில்லியன் இணைய பயனாளர்கள் இருந்த நிலையில், தற்போது ஒரு பில்லியன் இணைய இணைப்புகள் உள்ளன. இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.
2015-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், நாட்டை டிஜிட்டல் சக்தியாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ அடையாளம் (Aadhaar), direct benefit transfer (DBT) போன்ற திட்டங்கள் ஊழலை குறைத்து வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
டீப் டெக் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI), quantum computing, மெஷின் லெர்னிங், விண்வெளி தொழில்நுட்பம், செமிகண்டக்டர் திட்டம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் கண்டுபிடிப்பு முயற்சிகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-ல் உருவாக்கப்பட்ட அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India economy 2027, India vs Germany GDP, 5 trillion dollar economy India, Piyush Goyal economic forecast, India global economy ranking, Digital India growth 2025, Anusandhan National Research Foundation, India innovation fund rupees 1 lakh crore, Deep Tech summit Delhi 2025, India post-study work visa policy