7,400 கி.மீ. வேகம்., 2025 இறுதியில் இந்தியாவின் புதிய த்வானி ஏவுகணை சோதனை உறுதி
இந்திய தனது புதிய த்வானி ஏவுகணையை இந்த ஆண்டில் இறுதியில் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), 2025 இறுதியில் த்வானி (Dhvani) எனப்படும் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதிக்க திட்டமிட்டுள்ளது.
இது Mach 5 (மணிக்கு 7,400 கி.மீ) வேகத்தைக் கடந்து, BrahMos ஏவுகணையை விட வேகமாகவும் திறமையாகவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
த்வானி, ஒரு Hypersonic Glide Vehicle (HGV) ஆகும். இது வழக்கமான ஏவுகணைகளுக்கு மாறாக, முதலில் உயரமான நிலைக்கு ஏவப்பட்டு பின்னர் இலக்கை நோக்கி மிகுந்த வேகத்தில் பறக்கும்.
இதன்மூலம், எதிரியின் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகளைத் தாண்டுவது சாத்தியமாகிறது.
இந்த சோதனையில், அதிவேக ஏரோடைனாமிக்ஸ், மேம்பட்ட வெப்ப கவசம் மற்றும் உந்துவிசை அமைப்புகள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்கள் பரிசோதிக்கப்படவுள்ளன.
DRDO ஏற்கெனவே Hypersonic Technology Demonstrator Vehicle (HSTDV) சோதனையை மேற்கொண்டுள்ளது. இது த்வானி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
ப்ரம்மோஸ் ஏவுகணை Mach 2.8-3 வேகத்தில் இயக்கப்படும் சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். ஆனால், த்வானி அதன் இறுதி கட்டத்தில் சக்தியின்றி பறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிரடி திருப்பங்களை மேற்கொண்டு தடுப்பை கடக்க முடியும்.
இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெறுமானால், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Dhvani Hypersonic Missile Test, Dhvani Hypersonic Missile India, BrahDhvani